சத்திய தேவனின் பூரண வாழ்வை
அனுபவமாய் நான் பெறவேண்டும் – 2
1.
தேவனே என்னை போதித்து நடத்தும்
தோல்வி வராமல் தாங்கியே நிறுத்தும்
உத்தம பக்தர்கள் சூழ்ந்து நிற்க
இயேசுவை நோக்கித் தொடர உதவும் – 2 – சத்திய
2.
துன்பங்கள் தொடர்ந்து வந்திட்ட போதும்
துணிந்து நின்ற யோபுவைப்போல
அனைத்து வளமும் அகன்று போனாலும்
ஆபகூக் போல மகிழ்வேன் என்றும் – 2 – சத்திய
3.
கொண்டது அனைத்தையும் குப்பையாய்க் கண்ட
இலட்சிய வீரர் பவுலினைப் போல
இறுதிநாள் வரை உண்மையாயிருந்து
அழியா மகுடம் முடிவாய்ப் பெறுவேன் – 2 – சத்திய
saththiya thevanin purana vazhvai
anupavamay nan peravendum – 2
1.
thevane ennai pothiththu nadaththum
tholvi varamal thangkiye niruththum
uthdhama pakdharkal suzhnththu nirka
iyesuvai nokkith thodara udhavum – 2 – saththiya
2.
thunpangkal thodarnththu vanththidta pothum
thuninththu nindra yobuvaippola
anaiththu valamum akandru ponalum
aapakuk pola makizhven endrum – 2 – saththiya
3.
kondathu anaiththaiyum kubbaiyayk kanda
iladsiya varar pavulinaib pola
iruthi nal veerai unmaiyayirunththu
azhiya makudam mudivayb peruven – 2 – saththiya